Friday, June 24, 2005

"மெட்டிஒலி" விமர்சனம் --- A DROP in "அந்திமழை" !!!

திருவாளர் மாயவரத்தானின் மகுடம் போல் என் சிறிய மகுடத்திலும் ஒரு சிறிய சிறகு நேற்று ஏறியது :-) அந்திமழைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

பிரபல வலைப்பதிவர்களான அருண், தேசிகன், பத்ரி ஆகியோரைப் பற்றி எழுதிய
அந்திமழை என்னைப் பற்றியும் என் வலைப்பதிவு குறித்தும் எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது !!! இவ்வாறு அறியப்படுவது, நான் நிறையவும், இன்னும் நிறைவாகவும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும், ஆர்வத்தையும் எனக்கு அதிகப்படுத்துகிறது!

இதே கட்டுரையில் S.சங்கர் என்ற புதிய வலைப்பதிவரைப் பற்றியும் எழுதப் பட்டிருக்கிறது. என்னையும் S.சங்கரையும் பற்றி ஒரே சமயத்தில் அந்திமழை எழுதியதால், ஒரு வியப்பு தரும் செய்தியை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

சங்கருக்கு வலைப்பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியதும், அவரது வலைப்பூவை வடிவமைத்துக் கொடுத்ததும் சாட்சாத் பாலாவே (நான் தானுங்கோ !) தான் !!!

மேலும், சங்கர் என் நீண்ட நாள் (கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் !) நண்பரும் கூட !

"எழுதுவதோடு மற்ற வலைப்பூக்களில் ஆக்கப்பூர்வமான மறுமொழிகளையும் பதிக்கிறார்" --- இதாங்க நம்மளப் பத்தின அந்திமழையோட Highlight !!! அப்றம், நீங்க சொல்லுங்க !

என்றென்றும் அன்புடன்
பாலா

8 மறுமொழிகள்:

said...

வாழ்த்துக்கள் பாலா. என் வலைப்பதிவு அந்திமழையில் வந்த போது, அது 'beta testing' என்று நினைத்தேன் ;-)
எளிய அன்புடன்,
தேசிகன்

enRenRum-anbudan.BALA said...

Thanks, desikan !!!

And Thanks for introducing me (it was in July 2004) to the World of Thamiz blogs and thamizmaNam and helping me to set up my valaippathivu :)

said...
This comment has been removed by a blog administrator.
said...

பாலா அவர்களே,

நான் மெட்டிஒலி பற்றி எழுதி இருந்தேன் படித்தீர்களா? தொடர் நன்றாக உள்ளது. உங்கள் பதிவும் நன்றாக உள்ளது. திருமுருகன் மேல் எனக்கு சிறிது கோபம். அவர் நம்மவர்களைப்பற்றி இன்னும் பெருமையாக எடுத்துக் கூறி இருக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

dondu(#11168674346665545885) said...

Dear Bala,
The above comment under my name is not mine. Please see my latest post in my blog. Kindly disable anonymouus commenting in your blog. This is urgent.
Regards,
Dondu Raghavan

enRenRum-anbudan.BALA said...

டோண்டு பெயரில் வரும் அனானி அவர்களுக்கு,

தயவு செய்து இந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ளுமாறு தங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இப்படிச் செய்வதால், தமிழ் வலைப்பதிவுலகச் சூழல் மீது பலருக்கும் அவ நம்பிக்கை ஏற்பட்டு விடும் அபாயம் உள்ளது.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லதாக அமையட்டும். நன்றி !

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

பாராட்டுக்கள்.
பாராட்டுவதற்கு கூட இங்கு பலருக்கு மனமில்லை போலும் :(
தமிழ் வலைப்பூ உலகம் சிறப்பாக இயங்குகிறது.

said...

வாழ்த்துக்கள் பாலா!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails